3 மாதத்திலேயே சேதமான ரூ.17 லட்சம் குடிநீர் தொட்டி! தரம் குறித்து பொது மக்கள் கேள்வி அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

3 மாதத்திலேயே சேதமான ரூ.17 லட்சம் குடிநீர் தொட்டி! தரம் குறித்து பொது மக்கள் கேள்வி அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா !

3 மாதத்திலேயே சேதமான ரூ.17 லட்சம் குடிநீர் தொட்டி! தரம் குறித்து பொது மக்கள் கேள்வி அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா !
குடியாத்தம். செப்டம்பர். 4 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே செருவங்கி ஊராட்சி சாமுண்டிபுரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.17 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தொட்டி அமைந்துள்ள வளாகத்தின் சிமெண்டு தளம் குறுகிய காலத்திலேயே பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. தளம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ள்ளதுடன், பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து பள்ளங்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக கம்பம் அமைந்துள்ள பகுதி யை சுற்றிலும் சிமெண்டு தளம் உடைந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.பொதுமக்கள் தொடர் ந்து பயன்படுத்தும் பகுதியில் இது போன்று தளம் சேதமடைந்திருப்பதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள் ளது. மேலும், மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், சேதமடைந்த பகுதி களில் மழைநீர் தேங்கினால் தளம் மேலும் சேதமடைவதுடன், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.
ரூ.17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக் கப்பட்ட குடிநீர் தொட்டி வளாகத்தின் சிமெண்டு தளம் மூன்றுமாதங்களிலேயே சேதமடைந்தது எப்படி? கட்டுமானப் பணி யின் தரம் முறையாக கண்காணிக்கப் பட்டதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த தளத்தை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். மேலும், கட்டுமானப் பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, பொதுமக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad