1,070-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய சிறப்பு அழைப்பாளர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

1,070-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய சிறப்பு அழைப்பாளர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கமலா கல்வியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜோசப் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கமலா கல்வியியல் கல்லூரியின் செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டார்.

விழாவில் இரு கல்லூரிகளையும் சேர்ந்த 1,070-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதற்காக சிறப்பு அழைப்பாளர் ஜே.சி.டி. பிரபாகர், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்றவாறு பட்டங்களை வழங்கினார்.

மேலும், பட்டம் பெற்ற மாணவ–மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணம் குறித்து சிறப்புரையாற்றினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பட்டம் பெற்ற மாணவ–மாணவிகள் தங்களது கல்விப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் மகிழ்ச்சியுடன் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad