கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், செங்குறிச்சி ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளியின் ஆசிரியர் அருணா. சூரியகுமார் தலைமை ஏற்றார். செங்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ரேவதி தேர்தல் பார்வையாளராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து, பள்ளியின் ஆசிரியர் இரா. சீனுவாசன் வரவேற்புரையாற்றினார். பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் மறுகட்டமைப்பு தேர்தலுக்கான விதிமுறைகள் குறித்து அவர் விளக்கினார்.
இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்புக்கான தேர்தல் முறையாக நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் அருணா. சூரியகுமார் வாழ்த்துரையாற்றி, பள்ளியின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு முக்கியமானது என எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் க. கண்மணி, ராதாலெட்சுமி, செ. பானுமதி, செல்வி த. குணா, ம. தங்கம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியர் க. கண்மணி நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக