கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சார்பு நீதிபதிக்கான குடியிருப்பு திறப்பு விழா இன்று நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை பணியாற்றும் சார்பு நீதிபதிக்கான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில், பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் குடியிருப்பு கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடியிருப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய குடியிருப்பை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதிய குடியிருப்பை பார்வையிட்ட நீதிபதி சாந்தி, அங்கு செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். நீதித்துறை அதிகாரிகளின் பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற சார்பு நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக