உளுந்தூர்பேட்டை கார்த்திகேயா நகரில் நகராட்சி பூங்கா திறப்பு நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு திறந்து வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

உளுந்தூர்பேட்டை கார்த்திகேயா நகரில் நகராட்சி பூங்கா திறப்பு நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு திறந்து வைத்தார்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கார்த்திகேயன் நகர் பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட நகராட்சி பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு, பூங்காவை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கார்த்திகேயா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் பொழுதுபோக்கவும், பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரத்தை ஆரோக்கியமான முறையில் செலவிடவும் இந்த பூங்கா பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், பசுமை மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் புஸ்ரா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல்ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பூங்கா திறக்கப்பட்டதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தொடர்ந்து பூங்காவை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad