மேல்பாடி அருகே துணிக்கடை ஊழியர் கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பெண் ஊழியர் பலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

மேல்பாடி அருகே துணிக்கடை ஊழியர் கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பெண் ஊழியர் பலி !

மேல்பாடி அருகே துணிக்கடை ஊழியர் கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பெண் ஊழியர் பலி !
காட்பாடி , செப்டம்பர் 11 -
          வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மேல்பாடி பகுதியில் இரு சக்கர வாகனத் தில் துணிக்கடை ஊழியர்கள் இருவர் ஜோடியாக சென்றனர் அப்போது எதிர் பாராத விதமாக புளிய மரத்தில் மோதி  விபத்துக்குள்ளாகினர். இருசக்கர வாகன த்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி இந்த விபத்து குறித்து மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் பெயரில் மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று விசார ணை மேற் கொண்டனர் இதில் ராணிப் பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதி யை சேர்ந்த தனியார் துணி கடையில் வேலை செய்து வந்த அரக்கோணம் பாராஞ்சி பகுதியை சேர்ந்த பச்சையப் பன் (வயது 19) ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வெங்கடாசலபதி தெருவை சேர்ந்த அன்வர் பாஷா மகள் பௌசியா (வயது 19) இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்  இருசக்கர வாகனத்தில் மேல்பாடி பகுதியில் இருந்து திருவலம் நோக்கி செல்லும் போது மேல்பாடி அடுத்த வெப்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளா னது இதில் பெளவுசியா சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி பலியானார் என்ப தும் தெரிய வந்தது இது குறித்து மேல் பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பௌசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad