தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமியின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஆர். வசந்தவேல், தலைமையில் நகரமன்றத் தலைவர் திருநாவுக்கரசு, திமுக நகரச் செயலாளர் டி. டேனியல் ராஜ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தந்தை பெரியாரின் சமூகநீதி, சுயமரியாதை மற்றும் சமத்துவக் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக