இன்னர் வீல் கிளப் சார்பில் செருவங்கி பொது நூலகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கல் !
குடியாத்தம். செப்டம்பர். 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்னர் வீல் கிளப் சகோதரிகள் சார்பில் செரு வங்கியில் உள்ள பொது நூலகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங் கள் 21.9.2026 மாலை வழங்கப்பட்டன.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தலைப்புகளில் தேர்வு செய்யப் பட்ட புத்தகங்கள் நூலகத்திற்கு வழங்கப் பட்டன. வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப் பதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவும் வகை யில் இந்தப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் கிளப் தலைவி சரளா பாஸ்கர் தலைமை வகித்தார். செய லாளர் சாந்தி ரவி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் தீபிகா தயாளன் செய்திருந் தார் த. புவியரசி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.பொது நூலகத்திற்கு 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கிய இன்னர் வீல் கிளப் சகோதரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் நன்றி தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக