மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிஇடைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்ட வேலூர் புறநகர் குடியாத்தம் அதிமுக நிர்வாகிகள் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுராந்தகம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் அவர்களை ஆதரித்து, ஊனைமலை ஊராட்சியில் குடியாத்தம் நகரக் கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.இதில் கழக அமைப்புச் செயலாளர் வி. ராமு, ஒன்றியச் செயலாளர் காடை மூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ரஞ்சித் குமார், அழிஞ்சிகுப்பம் பழனிச்சாமி, பல்லலகுப்பம் ரமேஷ் மற்றும் ஊனை மலை கிளைக் கழக நிர்வாகிகள் முரளி, மாதவன், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அப்போது, அஇஅதிமுக வேட்பாளர் கணி தாக்ஷ சம்பத் அவர்களுக்கு ஆதரவு அளித்து, அவருக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக