தாலுகா அலுவலகத்தில் காலை நேரத் திலேயே புரோக்கர்கள் குறட்டை விட்டு தூக்கம்?தனிநபர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கண் காணிக்க கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 செப்டம்பர், 2026

தாலுகா அலுவலகத்தில் காலை நேரத் திலேயே புரோக்கர்கள் குறட்டை விட்டு தூக்கம்?தனிநபர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கண் காணிக்க கோரிக்கை !

தாலுகா அலுவலகத்தில் காலை நேரத் திலேயே புரோக்கர்கள் குறட்டை விட்டு தூக்கம்?தனிநபர்களின் நடமாட்டத்தை அதிகாரிகள் கண் காணிக்க கோரிக்கை !
குடியாத்தம், செப்டம்பர்  25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பொதுமக்கள் வந்து செல்லும் நேரத்தில், அலுவலக வளாகத்தில் சில தனிநபர்கள், புரோக்கர்கள் என கூறப்படுபவர்கள் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் பல் வேறு தேவைகளுக்காக தினமும் ஏராள மானோர் வந்து செல்லும் நிலையில், அலுவலக வளாகத்தில் சம்பந்தப்பட்ட பணிகள் ஏதுமின்றி தனிநபர்கள் நீண்ட நேரம் தங்குவது குறித்து கேள்வி எழுந் துள்ளது. குறிப்பாக காலை 10 மணி யளவில் அலுவலக வளாகத்தில் சிலர் படுத்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் பணிகள் நடைபெறுவதாக புகார்கள் எழாமல் இருக்கவும், அலுவலக வளாக த்தில் தேவையின்றி தனிநபர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அதிகாரிகள் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அலுவலக வளாகத்தில் யார் யார் அனுமதியுடன் வருகின்றனர், நீண்ட நேரம் தங்குவதன் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் கண்காணி த்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற் படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad