மனைவியை வரதட்சணை கேட்டு துன் புறுத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

மனைவியை வரதட்சணை கேட்டு துன் புறுத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் !

மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் !
காட்பாடி , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த மனைவியை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்திய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 10,000 அபராதமும் விதித்து சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு .
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி மண் டலம் ராமபத்ராபுரம் கிராமத்தைச் சேர் ந்த  சதீஷ் என்பவருக்கும் கடந்த 2014 ஆண்டு சித்தூரில் திருமணம் நடை பெற்றது. திருமணத்தின் போது மண மகன் வீட்டார் கேட்டபடி 20 சவரன் தங்க நகைகளும், சுமோ வாகனம் வாங்கு 
வதற்காக ரூ.1,80,000 ரொக்கமும் வரதட்ச ணையாக வழங்கப்பட்டது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில்,சதீஷ் மேலும் 15,000 கேட்டதால் அப்பணத்தை யும் பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். பின்னர் மீண்டும் 50,000 கூடுதல் வரதட்ச ணை கேட்டு கலைவாணியை அவர் துன் புறுத்தி வந்துள்ளார். இதற்கு குடும்பத்தி னர் பணத்தை தருவதாக சமாதானம் கூறியுள்ளனர். எனினும் மது அருந்தி விட்டு கலைவாணியிடம் தகராறு செய்து வந்த சதீஷ்  கடந்த 2015 கலைவாணி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக வும் பின்னர் மருத்துவமனையில் உயிரி ழந்து விட்டதாகவும் சதீஷ் பெண் வீட்டாரு க்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து கலை வாணியின் தாய்  அளித்த புகாரின் பேரில் யாதமரி காவல் நிலைய போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்  அப்போ
தைய சித்தூர் டி.எஸ்.பி   லட்சுமி நாயுடு விசாரணை நடத்தி தடையங்களைச் சேகரித்தார்.தொடர்ந்து 2015 ஜனவரி 13 அன்று திருப்பதி–பெங்களூரு பைபாஸ் சாலையில் வைத்து சதீஷ் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட் டார். சித்தூர் 6 வது  கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி   ஹரிதா முன்னிலையில் இவ்வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப் பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி வாதாடினார் விசாரணை முடிவில் சதீஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதே சமயம்,  போதிய ஆதாரங்கள் இல்லாத தால் ஐ.பி.சி 302, 201, 304-B மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டப் பிரிவுகளிலி ருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad