காட்பாடி சுற்று வட்டார ஏரிகளில் மண் அள்ளப்பட்டு வேறு இடங்களுக்கு விற் பனை செய்வதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு நடவடிக்கையை எடுக்க ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

காட்பாடி சுற்று வட்டார ஏரிகளில் மண் அள்ளப்பட்டு வேறு இடங்களுக்கு விற் பனை செய்வதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு நடவடிக்கையை எடுக்க !

காட்பாடி சுற்று வட்டார ஏரிகளில் மண் அள்ளப்பட்டு வேறு இடங்களுக்கு விற் பனை செய்வதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு நடவடிக்கையை எடுக்க !
காட்பாடி , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம், காட்பாடி சுற்று வட்டார ஏரிகளில் அரசு அனுமதிக்கப்பட்ட அள வைவிட அதிகமாக மண் அள்ளப்பட்டு வேறு கிராமத்தில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள் ளனர். ஒரு பில்லுக்கு அதிக அளவில் மண் அள்ளப்பட்டு கணக்கில் குறைவாக காட்டப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இளைய நல்லூர் ஏரி மற்றும் செம்பராய நல்லூர் ஏரிகளின் நீர்த் தேக்கப் பகுதிகள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, ஏரிகளில் நடைபெறும் மண் அள்ளும் பணிகளை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, அரசு விதிமுறைகளின்படி உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad