புதிய குடிநீர் மேல் தேக்க தொட்டி கட்டி தர கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

புதிய குடிநீர் மேல் தேக்க தொட்டி கட்டி தர கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு !

 புதிய குடிநீர் மேல் தேக்க தொட்டி கட்டி தர கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு !
 குடியாத்தம் , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்
தட்டப்பாறை ஊராட்சியில்.பிள்ளையார் கோவில் தெரு. சாவடி தெரு. பஜனை கோவில் தெரு. மற்றும் ஊர் முழுவதும் ஒரே மேல் நீர்தேக்கதொட்டி 30 ஆயிரம் கொள்ளளவில் உள்ளது இங்கு சுமார்
2 ஆயிரம் மக்கள் இந்த மேல் நீர்தேக்க தொட்டியை நம்பி குடிதண்ணீர் குடித்து வருகிறார்கள்.இந்த தண்ணீர் உப்பு நீர் ராக வருகிறது. நல்ல குடிதண்ணீர்  வரு வதற்கு.மோளப்பாறை முதல் தங்கவேல் புரம் வரை 1 கிலோமீட்டர் பைப்லையின் புதிதாக அமைத்து கொடுத்தால் நல்ல குடிதண்ணீர் ஊர்மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்
மேல் நீர்தேக்கதொட்டி சுமார் 35 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டது. இப்பொழுது அது கம்பி தெரியும் அளவிற்கு பழுது அடைந்து உள்ளது. புதிதாக 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி கட்டிதறும்படி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில்   இன்று  வட்டார வளர்ச்சி அலுவலர்.அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் ஆர். பாபு  CPIM கிளை செயலாளர் .எஸ். சிலம்பரசன் சி. சரவணன்CPIM தாலுக்கா செயலாளர்கள்.
ஜெ. சண்முகம். எம். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad