சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க 5-வது மாவட்ட மாநாடு குறைந்த பட்ச ஓய்வூ தியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 செப்டம்பர், 2026

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க 5-வது மாவட்ட மாநாடு குறைந்த பட்ச ஓய்வூ தியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் !

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்க 5-வது மாவட்ட மாநாடு குறைந்த பட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 26 -
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதி யில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. 
மாநாட்டுக்கு  மாவட்ட தலைவர்  இரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர்  பழனி வரவேற்புரை நிகழ்த் தினார். மாநாட்டில் மாநில செயலாளர்  சுசீலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.முன்னதாகதியாகி களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் குமார் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன் செயலாளர் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் மோகனா பொருளா ளர் அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
மேலும் மாநாட்டில் தோழர் புஷ்பகாந்தா, மாவட்ட துணைத்தலைவர், கோரிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
அதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியத்தை ரூ.6,750 ஆக உயர்த்தி, அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப் பட்டுள்ள ஓய்வூதியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி மற்றும் காசில்லா மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கவேண்டும் பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர் களின் குடும்பத்தினருக்கு உரிய பணப் பலன்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது
மாநாட்டில் கிருபன்கீர்த்தி, நரசிம்மன், எலிசபெத், கோகிலா, முருகசாமி, பாப்பு, ஜெயபால், கோபால், முனிரத்தினம், ஜெயலட்சுமி, சமிந்தம், தேவாராஜ், வீரா, சீதா, அமருல்லா, விஜயலட்சுமி, இந்து மதி, தூரியகலா, கீதா, தனம், சந்தா, ஜெயராமன், புருஷோத்தமன், குணைசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு, சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும்ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்துஆலோசிக்கப் பட்டது. இறுதியில் நன்றியுரை வழங்கப் பட்டது .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad