பெஸ்கி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 செப்டம்பர், 2026

பெஸ்கி மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்கம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்ற மாணவிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும், முகாமின் ஒரு பகுதியாக தினந்தோறும் பல்வேறு சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மரக்கன்று நடுதல், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழாவில், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு தூய்மை பணியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலப்பணிகளில் மாணவர்களின் பங்கு குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

விழாவிற்கு பெஸ்கி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை த. செல்வராணி தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் செல்வம் டேனியல் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். உதவி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர் ஜாஸ்மின் சோபியா, நகராட்சி கவுன்சிலர்கள் செல்வகுமாரி ரமேஷ்பாபு, ராஜேஸ்வரி சரவணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தி. பத்மா, உதவி திட்ட அலுவலர் ந. ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், நகராட்சி பரப்புரையாளர்கள் சுசிலா, சந்தியா, புனிதா, பானுமதி, யஸ்வந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முகாமில் மாணவிகள் சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad