புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உப்பளம் தொகுதியில் தனது பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனரை, தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தானாக முன்வந்து அகற்றினார்.
மேலும், தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் அவற்றில் ஒன்றை தானே அகற்றியதாக அன்பழகன் தெரிவித்தார். தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பேனர், கட்அவுட்கள் வைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக