நெல்லை சூர்யா மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 செப்டம்பர், 2026

நெல்லை சூர்யா மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகம்.

நெல்லை சூர்யா மருத்துவமனையில் அதிநவீன தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகம்

திருநெல்வேலி சூர்யா மருத்துவமனையில், வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் தண்டுவட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகெலும்பு தேய்மானம் காரணமாக தண்டுவட அடைப்பு ஏற்பட்டு, முதுகு வலி மற்றும் கால்களில் வலி, உணர்வின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேலும், நீண்ட காலமாக நடக்க முடியாமல் போதல், அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு பாரம்பரிய முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, நோயாளிகளுக்கு அதிக வலி மற்றும் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

இந்த நிலையில், சூர்யா மருத்துவமனையில் நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முறையில் மிகச்சிறிய அளவிலான கீறல் மூலம், சுமார் 3 முதல் 8 மில்லிமீட்டர் அளவிலான நுண்துளை வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் நோயாளிகளுக்கு ஏற்படும் வலி குறைவதுடன், மருத்துவமனையில் தங்கும் காலமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன சிகிச்சை முறைகள் மூலம், கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்படும் தண்டுவட அடைப்பு, ஸ்பைனல் கேனல் ஸ்டெனோசிஸ் மற்றும் மைலோபதி உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சை முறையின் மூலம் இதுவரை 75 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும், மற்றொரு நோயாளிக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 54 வயதுடைய பெண் ஒருவருக்கு கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் தொடர்ந்து வலி மற்றும் கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்ட நிலையில், நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் நடக்க முடியாமல் இருந்த நோயாளிக்கும் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர் மீண்டும் நடக்கும் நிலையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் நெல்லை சூர்யா மருத்துவமனையின் தண்டுவட நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
/Frame 9:16 with logo

நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம் சிறிய அளவிலான கீறல், குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு மற்றும் விரைவான மீட்பு போன்ற பலன்கள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் தமிழகத்தில் சூர்யா மருத்துவமனையில் மட்டுமே தற்போது இந்த வகையான நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad