கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகரணி துணைச் செயலாளர் கோபியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வி.சி.கவின் மாநில செயலாளர் அ. மாதேஷ் தலைமை வகித்தார்.
பிறந்தநாள் விழாவையொட்டி பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநில தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், மாநில துணைச் செயலாளர் கவிஞர் திராவிடராசா, ஒன்றிய பொறுப்பாளர் பலராமன், வணிகரணி மாவட்ட நிதி செயலாளர் புலி ராஜேஷ் மற்றும் நந்தகுமார், சுரேஷ், மூர்த்தி, பெருமாள், மகளிரணி செல்வி, பிரவின், சந்தோஷ், தொண்டரணி இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதற்கு முன்னதாக, வணிகரணி மாநில துணைச் செயலாளர் கோபி, மாநில செயலாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான அ. மாதேஷ் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து, அன்பளிப்பாக பணக்கட்டு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.
இரா. நரேஷ் குமார்
கிருஷ்ணகிரி மாவட்ட
செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக