கால்வாய் அமைக்கும் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சு வார்த்தை !
குடியாத்தம் செப்டம்பர் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். வட்டம்
சீவூர் மதுரா கள்ளூர் கிராமத்தில் இன்று
காலை 11.00 மணி அளவில் குடியாத்தம் -பலமநேர் சாலையில் தேசிய நெடுஞ் சாலை துறைக்கு சொந்தமான புல எண்: 253-ல் கால்வாய் அமைக்கும் பணி நடை பெற்று வருகின்றது மேற்படி பணியை விரைந்து முடிக்க கோரி கள்ளூர் பகுதி மக்கள் 15 நபர்கள் சாலை மரியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் காவல்துறையி னருக்கு தகவல் தெரிவிக்கபட்டவுடன், காவல் துறையினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் , சாலைமறியல் கைவிட்டப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக