ரோட்டரி சங்கம் நல்லம்மை ராமநாதன் சங்கரா கண் மருத்துவமனை பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ரோட்டரி சங்கம் நல்லம்மை ராமநாதன் சங்கரா கண் மருத்துவமனை பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் !

ரோட்டரி சங்கம் நல்லம்மை ராமநாதன் சங்கரா கண் மருத்துவமனை பார்வை யிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் !
குடியாத்தம் , செப்டம்பர் ,5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் .குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை ராமநாதன் மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் வேலூர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது சனிக் கிழமையன்று முற் பகல் ரோட்டரி சங்க கட்டிடத்தில்சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் டி. எஸ் .  ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்
ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஜெ.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே. எம் .பூபதி ஆகியோர் இம் முகாமைத் துவக்கி வைத்து கொடையாளர் ஆசிரியர் சம்பத் அவர்களை கௌரவப்படுத்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முன்னாள் ஆளுநர் சுரேஷ், மாவட்ட நிர்வாகி கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இம் முகாமில் 507 பயனாளி கள் கலந்து கொண்டு 196 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு  தேர்ந்தெடுக்கப் பட்டனர். இம் முகாமில் முன்னாள் தலை வர்கள் டாக்டர் எம் .எஸ். திருநாவுக்கரசு, என் .சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் என் மோகன், பி.எல்.என்.பாபு, வேல்முருகன், ஆர்.வி. ஹரி கிருஷ்ணன், அண்ணா மலை, ஏ மேகராஜ், கே. சந்திரன், எம் .ஆர். மணி, சி.பி. மகாராஜன், பிரவீன் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முகாம் சிறப்பாக நடைபெறத் தேவை யான ஏற்பாடுகளை முகாம் தலைவர் எ ன். ஜெயச்சந்திரன், செயலாளர் பார்த் திபன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார் கள்.இறுதியில் செயலாளர் ஜெ.தமிழ்ச் செல்வன் நன்றியுரையாற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad