நாசரேத் சாலமோன்; பள்ளியில் ஆசிரியர் தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 செப்டம்பர், 2026

நாசரேத் சாலமோன்; பள்ளியில் ஆசிரியர் தினம்.

நாசரேத் சாலமோன்; பள்ளியில் ஆசிரியர் தினம்

நாசரேத், செப்டம்பர் 5, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். 

மாணவர்கள் டாக்டர்.ராதாகிருஷ்ணன் கல்விக்கு ஆற்றிய தொண்டு பற்றி பேச்சு போட்டி நடத்தினர். மாணவர்கள் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் வேடம் அணிந்து வந்து இருந்தனர். 

மாணவர்கள் பட்டிமன்றம், நடனம், நாட்டியம் மற்றும் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்கி மகிழ்ந்தனர். 

இறுதியில் ஆசிரியர் சந்தனகுமாரி நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாடடினை மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad