அணைக்கட்டு பொய்கை சந்தையில் ஆக்கிரமிப்பு போலி பில்கள் தயாரித்து கூடுதல் கட்டணம் அரசு நடவடிக்கை எடுக்க ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

அணைக்கட்டு பொய்கை சந்தையில் ஆக்கிரமிப்பு போலி பில்கள் தயாரித்து கூடுதல் கட்டணம் அரசு நடவடிக்கை எடுக்க !

அணைக்கட்டு பொய்கை சந்தையில்  ஆக்கிரமிப்பு போலி பில்கள் தயாரித்து கூடுதல் கட்டணம் அரசு நடவடிக்கை எடுக்க !
அணைக்கட்டு , செப்டம்பர் 8 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பொய் கை கால்நடை சந்தையில் ஆக்கிரமிப்பு, போலி பில்கள் போட்டு கூடுதல் கட்டணம் வசூல் புகார் —மாவட்ட ஆட்சியர், எஸ் பி, காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவ டிக்கை எடுக்க கோரிக்கை சுமார் 5000 திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாண வர்கள் நடமாட்டம் - அவசரத்திற்கு ஆம்பு லன்ஸ் செல்லக்கூட வழியில்லை பொது மக்கள் வேதனை
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலு கா, பொய்கை ஊராட்சி, பொய்கை பேரு ந்து நிறுத்தம் மற்றும் தேசிய நெடுஞ் சாலை அருகே வாரந்தோறும் நடை பெறும் சந்தையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், பள்ளி–கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.சந்தை நடைபெறும் நாட் களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதுடன், தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதிகளிலும் கடைகள் அமைக்கப்படுவதால், வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவசர நேரங்க ளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதற்கும் இடையூறு ஏற்படுவ தாக தெரிவிக்கின்றனர்.மேலும், சந்தை க்கு கால்நடைகள் மற்றும் கோழிகளை கொண்டு வரும் வாகனங்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட போலி பின்னுதல் போட்டு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும், ஒரு கோழிக்கு ரூ.20 வரை ஒரு மாட்டிற்கு நூறு ரூபாய் விதம், வாகனங்களுக்கும் தொகையை வசூலித்து, தாறுமாறாக விவசாயிகளிடம் பணம் கூடுதலாக வசூலிப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் பொது மக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதுவரை கண்டு கொள் ளாமல் விட்டு இருந்த செய்தியாளர்கள் கூட இதற்கு மேல் பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலட்சி யமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக் கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடைகள் ஆக்கிரமித்து சுமார் 15 அடி தூரத் திற்கு பேரிகார்டு வைக்கப்பட்டுள் ளது, சந்தை பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் தொடர்வதாகவும் கூறப் படுகிறது. பேரிகார்ட் 5 லட்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள காரணம் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடை முறைப்படுத்த வேலி அமைக்க ஆனால் இவர்கள் பேரிக்கடை வைத்து கடைகள் வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.
இதனால், பொய்கை சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, போக்குவரத்தை சீரமைக்கவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்யவும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுகளு க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பையும், அவசர வாகனங்களின் தடை யற்ற போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப் பாளர்  மற்றும் காவல்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த தாரர்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்பார் களா? என்ற எதிர்பார்ப்பு பொய்கை பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad