ஆம்பூர் அருகே சிறுமியை திருமணம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி யைச் சேர்ந்த (15 வயது) சிறுமி கடந்தஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிலிருந்துதிடீரென காணாமல் போயுள்ளார். இதனால்அதிர்ச் சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்க ளில் தேடியும் சிறுமி கிடைக்காததால், உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அப்போது , வானக்கார தோப்பு பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுபாஷ், (வயது 25) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றதும், இருவரும் திரு மணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், சிறுமி யை அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக சுபாஷ் மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்த உமரா பாத் போலீசார், அவரை ஆம்பூர் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுமியை திருமணம் செய்ததாக இளை ஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக