மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி !
சுகாதாரமற்ற குடிநீர்,காற்றோட்டமில்லாத உள் அரங்கம்; போட்டிகள் தாமதத்தால் கடும் சிரமம் மாணவர்கள் அவதி
காட்பாடி , செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ள னர்.மாணவர்களுக்காக வைக்கப்பட்டி ருந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகவும், காற்றோட்டம் குறைந்த உள் விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டதால் மாணவர்கள் சிரமப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. மேலும், போட்டி கள் திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் தாமதமானதுடன், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுவது மற்றும் அமைச்சர் நிகழ்ச்சிகள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்திருந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக ஏற்பாடு செய்திருக்க வேண் டும் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். ஏற்கனவே விளையாட்டு மாணவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவத் திற்கு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் இதுபோன்ற அலட்சி யக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது கவலை அளிப்பதாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக