பழுதடைந்த மின்கம்பம், தாழ் வாகச் செல்லும் மின்கம்பிகள் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரி !
மின் கம்பம் என்று கூட பாராமல் வளை த்து போட்டுள்ள அராஜக கடைக்காரர்கள், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி உயரமான மின்கம்பம் வயர்களை அமை த்து உயரத்தில் எடுத்துச் செல்ல கோரிக் கை
அணைக்கட்டு , செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கந்தனேரி கூட்ரோடு, கழனிபாக்கம் ஊராட்சி, பள்ளிகொண்டா–நெல்வாய் நெடுஞ்சாலையில் இருந்து தங்கக்கோ யில் செல்லும் சாலை, கழனிபாக்கம் கிராமம் பகுதியில் சாலையோர ஆக்கிர மிப்புகள் மற்றும் ஆபத்தான மின்கம்பங் களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள் ளது. அப்பகுதியில் மிகவும் பழுதடைந்த மின்கம்பங்கள் காணப்படுவதுடன், சிறிய காற்று, மழைக்கே அவை முறிந்து விழும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். மேலும், மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வதுடன், காற்றில் ஆடும் கம்பிகள் கடைகளின் இரும்புத் தகடு கூரைகளில் உரசும் நிலையில் இருப்ப தாகவும் கூறப்படுகிறது. இதனால் மின் கசிவு மற்றும் மின்சாரம் தாக்கும்அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்து ள்ளனர். இதனிடையே, சாலை யோரங் களில் சுமார் 15 அடி வரை ஆக்கிரமித்து ஹோட்டல்கள் மற்றும் கடைகள் அமைக் கப் பட்டுள்ளதாகவும், அடுப்புகள் உள்ளிட் டவை சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள் ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று, மழை நேரங்களில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் இந்த ஹோட்டல்களில் ஒதுங்கும் நிலையில், தாழ்வாகச் செல் லும் மின்கம்பிகள் மற்றும் அருகிலுள்ள அடுப்புகள் காரணமாக எதிர்பாராத விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந் தப்பட்ட துறைகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. எனவே, விபத்து ஏற்படும் முன்பே பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி, உயரமான புதிய கம்பங்கள் அமைத்து, மின் கம்பி களை பாதுகாப்பான உயரத்திற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றி, சாலையை உரிய அளவில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், அணைக்கட்டு வட்டாட்சியர், மின்சாரத்துறை, பள்ளிகொண்டா காவல் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும், ஆபத்து குறித்து முன்கூட்டியே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட் சியம் காட்டப்பட்டு விபத்து அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பொறுப்புடைய அதிகாரிகளின் கடமைத் தவறல் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக