ரயிலில் ஆபத்தான நிலையில் இருந்த முதியவரை பாதுகாப்பு படையினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவி !
காட்பாடி , செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே நிலையத்தில்புனே - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த (73 வயது) முதியவரை ரயில்வே பாது காப்புப் படையினர் (RPF) மற்றும் சி.எம்.சி மருத்துவக் குழுவினர் துரிதமாகச் செயல் பட்டு காப்பாற்றியுள்ளனர் புனேயில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல் லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த வினயசந்திரன் (வயது 73) என்பவர் புனேயில் இருந்து மாவேலிக்கரைக்கு பயணம் செய்தார். இதய நோய் பாதிப்புக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் இவர் கடுமை யான வெப்ப பக்கவாதத்தால் Heat stroke பாதிக்கப்பட்டு, ரயிலிலேயே சுயநினை வை இழந்து மயங்கி விழுந்தார்.நேற்று (09.09.2026) காட்பாடி ரயில் நிலைய நடை மேடை 4 மற்றும் 5-ல் உதவி துணை ஆய் வாளர் முரளி ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது ரயிலில் முதியவர் ஒருவர் மயக்கமடைந்து உயிருக்குப் போராடுவது குறித்து பயணச்சீட்டு பரி சோதகர் சுஜி மற்றும் சக பயணிகள் தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்ததும் உடனடியாக களமிறங்கிய உதவி துணை ஆய்வாளர் முரளி மற்றும் காவலர் மனிஷ் குமார் ஆகியோர், காட்பாடி ரயில் நிலை யத்தில் இயங்கி வரும் சி.எம்.சி அவசர மருத்துவ மையத்தைத் தொடர்பு கொண் டனர்.தொடர்ந்து சி.எம்.சி மருத்துவ மைய ஆண் செவிலியர் அனந்த் மாணிக்கம் மற்றும் ரயில்வே காவல் உதவி ஆய்வா ளர் பத்மராஜா தலைமையிலான குழுவி னர் ரயில் பெட்டிக்குள் சென்று முதிய வருக்குத் தேவையான அவசர முதலுதவி களைத் துரிதமாக வழங்கினர். சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட அவசர சிகிச் சைக்குப் பின் முதியவர் இயல்பு நிலைக் குத் திரும்பினார். தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு பயணத்தைத் தொடர விருப்பம் தெரிவித்ததையடுத்து அனுமதி க்கப்பட்டார். நேரத் தோடு செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் காவலர்கள் மற்றும் சி.எம்.சி மருத்துவக் குழுவினருக்குப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக