கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்தி பெற்ற பரிக்கல் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில், தமிழகத்தின் முக்கியமான நரசிம்மர் திருத்தலங்களில் ஒன்றாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் கோயிலுக்கு வருகை தந்தனர். அவர்களை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று, கோயிலின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்த இருவரும், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபட்டனர். கோயில் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் கோயிலுக்கு வருகை தந்த தகவல் அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவர்களை காண திரண்டனர். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக