தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 செப்டம்பர், 2026

தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை நடைபெற்ற விழாவில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்கினார்.

தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று (28.09.2026) நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தினை வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற அரசு விழாவில் ஜீன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். 

இத்திட்டத்திற்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜீன் 22 முதல் செப்டம்பர் 26 வரை கணக்கிட செய்யப்பட்டு 3202 குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. 

அதாவது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1779 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 999 குழந்தைகளுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 424 குழந்தைகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இன்றையதினம் தூத்துக்குடி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் 50 குழந்தைகளுக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 35 குழந்தைகளுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 26 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 111 குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது. 

மீதமுள்ள குழந்தைகளுக்கு கூட்ட நெரிசல்களை தவிர்க்கும் வகையில் நாள்தோறும் காலை 25 குழந்தைகளுக்கும், மதியம் 25 குழந்தைகளுக்கும் அதற்கான அழைப்பிதழ் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். 

அழைப்பிதழ் பெற்றுள்ள தாய்மார்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் வந்து பெற்றுச் செல்வதற்கான மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வில் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.எபனேசர் ஜோயல் குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பிரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர், தூத்துக்குடி மரு.யாழினி, துணை முதல்வர் மரு.கலைவாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) தபாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad