தமிழகம் கர்நாடக ஆந்திரா உள்ளிட்ட 300 திரைகளில் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக நெல்லையில் கிட்டி திரைப்படத்தின் குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டி.
இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் முருகா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அசோக்குமார் பாலகிருஷ்ணன், நடிகைகள் நிஷா சங்கவி சிமு அட்வான்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கிட்டி திரைப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நெல்லையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ், தயாரிப்பாளர் திருமாறன் திரைப்படத்தின் நடிகர் அசோக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் பேசும்போது சைக்கோ திரில்லர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது வரும் அக்டோபர் இரண்டாம் தேதி இந்த திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது
விடுமுறை தினத்தில் திரையிடும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கில் சென்று காண வேண்டும் 300 திரைகளில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கிட்டி என்ற பெயர் டெல்டா மாவட்டங்களில் எலி பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள ஒரு கருவி இந்த திரைப்படத்தில் குற்றவாளியை எலி பிடிப்பது போல் திட்டமிட்டு போலீசார் கைது செய்வதை மையப்படுத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திரைப்படத்தின் நடிகர் அசோக் குமார் கூறும்போது முருகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
சைக்கோ ட்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வில்லனாக இரண்டும் சேர்ந்த கலவையாக நடித்திருப்பது புதிய அனுபவத்தை தந்துள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக