குடியாத்தம் நகராட்சி ஊழியர்களின் அலட்சியம் சேகரித்த குப்பைகளை தினமும் ஓரிடத்தில் கொட்டி எரிப்பு!
குடியாத்தம், செப்டம்பர் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா, புதுத்தெரு 7-வது வார்டு பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சேகரித்த குப்பை களை தினமும் ஓரிடத்தில் கொட்டி எரிக் கின்றனர்.இதனால் அப்பகுதியில் உள்ள வயதானவர்கள், பெண்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மூச்சு நோயால் பெரிதும் பாதிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சிக்கு புகார் தெரிவித் தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனை தடுக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக