குடியாத்தம் பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மாபெரும் போதைப் பொருள் காசநோய் விழிப்புணர்வு பேரணி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

குடியாத்தம் பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மாபெரும் போதைப் பொருள் காசநோய் விழிப்புணர்வு பேரணி !

குடியாத்தம் பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக மாபெரும்  போதைப் பொருள் காசநோய் விழிப்புணர்வு பேரணி !
குடியாத்தம். செப்டம்பர் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் வளாகத்தில்.இன்றுகாலை 10:30 மணியளவில் நகராட்சி அலுவலகத் தில் தொடங்கப்பட்டது நகராட்சி ஆணை யாளர் கே எம் தனலட்சுமி மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் முனைவர் ஜி சுவாமி பிள்ளை ஜான்சன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் இதில் திருவள்ளுவர் மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ் பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம் சாய்பாபா முன்னிலை வகித்தனர்  திருவள்ளூர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நெல்லூர் பேட்டை  நேஷனல் மேல்நிலைப்பள்ளி நகராட்சி மேல்நிலைப் பள்ளி அரசினர் மேல் நிலைப்பள்ளி தட்டப்பாறை ஆகிய ஐந்து அமைப்புகளை சார்ந்த 125 மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள்  ஆர் ஜெயக்குமார்  தமிழ் திருமால் கவிஞர் எழுத்தாளர் சிவசூரியன்  மணிகண்டன் தியாகராஜன் ஆகியோர் செய்தனர் நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர்  கனகராஜ்  ஹேமலதா ஆகியோர் பேரணியை நிறைவு செய்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad