கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் ஒன்றிணைந்து "தமிழக மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியுள்ளனர்.
மஞ்சள், வெள்ளை, சிவப்பு,ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட இந்த கட்சியின் கொடியில் நடுவே இரண்டு சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவராக ஆபித் ,மாநில செயலாளராக ராம்குமார்,மாநில பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
இந்த நிகழ்ச்சியில் அஜித்குமார் ரசிகர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில தலைவர் ஆபித் செய்தியாளர் சந்தித்து பேசுகையில்
தமிழக மக்கள் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளோம் கொடியையும் அறிமுகம் செய்யும் கூட்டம் இன்று நடத்தினோம் எங்கள்
மனித நேயத்துடன் கூடிய மதசார்பற்ற மக்கள் பணி, சாதி சமயமற்ற சமூக நீதிகோட்பாட்டை வலியுறுத்துதல் , இயற்கை வள பாதுகாப்பு, பெண்ணுரிமை மற்றும் சம வாய்ப்பு, தமிழர் நலம் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவற்றை முக்கிய கொள்கைகளாக கொண்டு இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்
நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வராத நிலையில் அவரது ரசிகர்கள் புதிய கட்சி தொடங்கியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக