செப் 27. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில்ன் தெற்கு மாடவீதி ரெங்கநாதர் சன்னதி கருடசேவை நடந்தது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 11 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம். சாத்து முறை கோஷ்டி நடந்தது. பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 7 மணிக்கு உற்சவர் ரெங்கநாதர் முன் மண்டபம் எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி இளைஞர் பெருமன்றத்தினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக