ஒய்வு ஊதிய பயனாளிகள் ஆதார் எண் ணை இணைக்க வட்டாட்சியர் அலுவல கங்களில் சிறப்பு முகாம் !
குடியாத்தம். செப்டம்பர் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர் மற்றும்ஆதர வற்றோர் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதற்கான சிறப்பு உதவி மையங்கள் மற்றும் முகாம் கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்திய அரசின் புதிய வழி காட்டுதலின் படி, இனி வரும் காலங்களில் ஆதார்அடிப் படையிலான பணப்பரிவர்த்தனை முறை (ABPS) மூலமாக மட்டுமே ஓய்வூ தியத் தொகை பயனாளிகளின் கணக் கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஓய்வூ தியம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்த ஆதார் இணைப்புப் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்படி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்டப் பிரி வில் பிரத்யேக உதவி மையங்கள் அமை க்கப்பட்டுள்ளன. விரல் ரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ள முதி யவர்கள் மற்றும் பெயர் திருத்தம் செய்ய வேண் டிய பயனாளிகளுக்கு இங்கு தகுந்த வழி காட்டுதல்களும், உதவிகளும் வழங்கப் பட்டு வருகின்றன இதுவரை தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காத ஓய்வூதியதாரர்கள், உடன டியாக தங்களது ஆதார் அட்டை நகல், ஓய்வூதியப் புத்தக நகல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தையோஅல்லது தங்களது வங்கி கிளையையோ அணுகி இந்த இணைப்பை குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் உடன டியாக மேற்கொள்ளுமாறு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக