கே வி குப்பம் வட்டம் ரயில்வே இருப்பு பாதையில் ரயிலில் அடிபட்டு ஆண் நபர் இறந்து உள்ளார். ரயில்வே போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 செப்டம்பர், 2026

கே வி குப்பம் வட்டம் ரயில்வே இருப்பு பாதையில் ரயிலில் அடிபட்டு ஆண் நபர் இறந்து உள்ளார். ரயில்வே போலீசார் விசாரணை !

கே வி குப்பம் வட்டம்  ரயில்வே இருப்பு பாதையில்   ரயிலில் அடிபட்டு ஆண் நபர் இறந்து உள்ளார். ரயில்வே போலீசார் விசாரணை !
குடியாத்தம். செப்டம்பர் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 47 அம்மணாங்குப்பம் கிராமத்தில்   (29-09-2026  இரவு ரயில்வே பாலம் அருகே கம்பம் 146 அருகே விநாயகபுரம் கிராமத் தை சேர்ந்த குமரேசன் வயது சுமார் 55  மதிக்கத்தக்க  நபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என விசாரணையில் தெரிய வருகிறது . மேற்படி நபர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்கள் எனவும்  தெரிய வருகிறது. மேற்படி சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தி ற்கு நேரில் வந்து பிரேதத்தை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர் 

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad