குடியாத்தம் அடுத்த சிவூர் கிராமத்தில் ரோட்டரி சங்கம் பாலாறு மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 செப்டம்பர், 2026

குடியாத்தம் அடுத்த சிவூர் கிராமத்தில் ரோட்டரி சங்கம் பாலாறு மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் !

குடியாத்தம் அடுத்த சிவூர்  கிராமத்தில் ரோட்டரி சங்கம் பாலாறு மருத்துவமனை இணைந்து நடத்திய பொது  மருத்துவ முகாம்  !
குடியாத்தம். செப்டம்பர் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீ ஊர் கிராமத்தில். இன்று இலவச பொது மருத்துவ முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், பாலாறு 24 மணி நேர மருத்துவ மனை, நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மே. நி. பள்ளி இணைந்து ஏற்பாடு செய்த இலவச பொது மருத்துவ முகாம் சீவூர் கிராமத்தில் ஊ. ஒ. நிலைப்பள்ளியில் 30 9 26 புதன்கிழமை அன்று பிற்பகல் 2மணி முதல் 5 மணி வரை மிகச் சிறப்பாக நடை பெற்றது  இதில்ரோட்டரி சங்கத் தலைவர் டி எஸ் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்
மருத்துவ பணிகள் இயக்குனர் பி எல் என் பாபு, செயலாளர் ஜெ. தமிழ்ச் செல் வன்,மதியழகன், பரசுராமன், பால முரு கன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் திட்ட அலுவலர் ஆர். ஜெயக் குமார் வரவேற்புரை ஆற்றினார் சமூகப் பணி இயக்குனர் என் எஸ் குமரகுரு முகா மைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். பாலாறு மருத்துவமனை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் எம் எஸ் சிதம்பரம், சித்த மருத்துவர் ஜெ. கல்பனா, பல் மருத்துவர் திருமகள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு சுமார் 117 புற நோயாளிகளை பரிசோதி த்து மருத்துவ ஆலோசனை வழங்கினார் கள். மேலும் அவர்களுக்கு இலவசமாக மருந்துகள் அளிக்கபட்டது இறுதியில் உதவி திட்ட அலுவலர் ஹரி கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad