காச நோய் இல்லாத தமிழகத்தை உரு வாக்குவோம்" விழிப்புணர்வு பிரச்சாரத் தை ஒன்றியக்குழு தலைவர் தொடக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 செப்டம்பர், 2026

காச நோய் இல்லாத தமிழகத்தை உரு வாக்குவோம்" விழிப்புணர்வு பிரச்சாரத் தை ஒன்றியக்குழு தலைவர் தொடக்கம்!

காச நோய் இல்லாத தமிழகத்தை உரு வாக்குவோம்" விழிப்புணர்வு பிரச்சாரத் தை ஒன்றியக்குழு தலைவர் தொடக்கம்!
ராணிப்பேட்டை , செப்டம்பர் 17 -
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் சார்பில், காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற இலக்கினை அடையும் வகையில், பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடை பெற்றது. நெமிலி வட்டார மருத்துவ அலு வலர் தினேஷ்குமார் தலைமை வகித் தார். நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் காசநோய் இல்லாத தமிழகத்தை உரு வாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதா கைகளுடன் ஆற்றோரத்தெரு, நெமிலி பஜார் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்
களின் வழியாக ஊர்வலமாகச் சென் றனர். இதில், டாக்டர் கிருத்திகா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலன், மூத்த சிகிச்சை மேற்பார்வை யாளர் ஸ்டீபன், நெமிலி பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், நெமிலி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் முகமது அப்துல் ரகுமான், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் சரவணன், ஆசிரியர்கள், களப்பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.காசநோய் குறித்த விழிப் புணர்வு துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங் கினர் .

ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad