குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு !
குடியாத்தம் , செப்டம்பர் 14 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமம், பூசாலிப்பட்டி ரயில் வே கேட் அருகில், 13.09.2026 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில், தினகரன், த/பெ. கங்காதரன், வயது சுமார் (வயது 48 ) என்பவர் . மணி என்பவருக்குச் சொந்த மான கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தற்போது, மேற்படி தினகரன் அவர்களின் பிரேதம் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் வைக் கப்பட்டுள்ளது.மேற்படி இறந்த நபருக்கு வனிதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக