தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (11.09.2026), மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (ம) வேளாண்மை இயக்குநர் கே.வி.முரளிதரன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டப் பணிகளை பார்வையிட்டு மாணவர்களுடன் உணவு அருந்தினார். லூர்து அம்மாள்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டப் பணிகளுக்கான பொது சமையல் கூடத்தின் செயல்பாடுகள் குறித்தும், மேலும், தூத்துக்குடி மாநகராட்சி, பத்ரகாளியம்மன் தெரு, எஸ்.எஸ் பிள்ளை சந்தை அருகில் பக்கிள் ஓடை கால்வாயினை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும், செல்வநாயகபுரத்தில் மழைநீர் வடிகால் மற்றும் நிரந்தர மின் மோட்டார் அறையின் செயல்பாடுகள் குறித்தும்,
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகம், திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலம், காட்சிப்படுத்தப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் பார்வையிட்டு துறை அலுவலர்களுடன் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட அரசு உயர் சிறப்பு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் பாதுகாப்பு முன்னேற்பாடுப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் திருச்செந்தூர் வட்டம், கந்தசாமிபுரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணி ஆய்வு, திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆவுடையார்குளம் மற்றும் உபரி நீர் கால்வாயினை தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (ம) வேளாண்மை இயக்குநர் கே.வி. முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.எபனேசர் ஜோயல் குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.ப்ரியதர்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யாழினி (தூத்துக்குடி), மரு.வித்யா (கோவில்பட்டி), வேளாண்மை இணை இயக்குநர் திரு.கிருஷ்ணகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக