வேலூரில், இந்திய சைகை தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி !
வேலூர் , செப்டம்பர் 23 -
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியரக வளாக த்தில் விழிப்புணர்வு பேரவை, வேலூர் மாவட்டத்தில் இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாணவ மாணவி களுக்கு ரோஜாப்பூ வழங்கி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியுடன் சைகை சை கையில் வணக்கம் வைத்து பேரணி துவக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஜே ஆர் ஓ இனியன், அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கம், தன்னார்வலர்கள் மாநில தலை வர் கே பொன்னுசாமி, பிசியோதெரபி மருத்துவர்கள், ஹோலி கிராஸ் பள்ளி, வொர்த் பள்ளி, ஐடிஐ, லூர்தரன் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளின் நலத் துறை அலுவலர்கள் பணியாளர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டுவிழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் வளாகம் முதல் சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் வரை சென்ற டைந்து நிறைவடைந்தது. இதில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக