பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் கண்களை தானமாக வழங்கிய குடும்பம் நேரில் சென்று நன்றி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் கண்களை தானமாக வழங்கிய குடும்பம் நேரில் சென்று நன்றி !

பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்  கண்களை தானமாக வழங்கிய குடும்பம்  நேரில் சென்று நன்றி !
 குடியாத்தம், செப்டம்பர் 17 -
                    வேலூர் மாவட்டம் குடியாத்தம்
வெங்கடசா மியின் மறைவில் தொடர்ந்த மனிதநேயம் – 1,780-வது கண் தானத்தை ஒருங்கி ணைத்த  ரொட்டேரியன் உயிர் அறக்கட்ட ளை நிறுவனர்  எம். கோபிநாத் தலைமையில் வழங்கப்பட்டதுகுடியாத்தம் தமிழ்நாடு அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டநிலை யிலும், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய அரசு போக்கு வரத்துக் கழக ஓட்டுநர் வெங்கடசாமி, (வயது 59) உயிரிழந்தார்.வேலூர் மாவட் டம்  காட்பாடி சில்க் மில் பகுதியைச் சேர்ந்த வெங்கடசாமி, பேர்ணாம்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை யில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பேர்ணாம்பட்டிலிருந்து குடியாத்தம் வழியாக பேருந்தை இயக்கியபோது, நேதாஜி சவுக் – கங்கை அம்மன் கோவில் புதிய பாலம் அருகே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடல் நிலை பாதிக்கப் பட்டதை உணர்ந்த அவர் பேருந் தை கட்டுப்பாட்டுடன் நிறுத்திய பின்னர் மயங்கி விழுந்தார். பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் பாதிப் பின்றி தப்பி னர்.கண் தானம் செய்த குடும்பம் வெங் கடசாமியின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் கண் தானம் செய்ய முன்வந்தனர். இதற்கான ஏற்பாடு களை குடியாத்தத்தைச் சேர்ந்த கண் தான ஆர்வலர்   குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க  சாசன தலைவர் எம். கோபிநாத் ஒருங்கிணைத்தார்.
இந்தக் கண் தானம், கோபிநாத் ஒருங்கி ணைத்த 1,780-வது கண் தானம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கண் தானம் மட்டு மின்றி, ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி ச்சடங்கு செய்வது, உடல் தானம் மற்றும் ரத்த தானப் பணிகளை ஒருங்கிணைப் பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை களிலும் கோபிநாத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.இதுவரை 840-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களுக்கு தனது சொந்த செலவில் இறுதி மரியாதை செய்துள்ள தாகவும், 780-க்கும் மேற்பட்ட உடல் தானங் களையும், 2000-க்கும் மேற்பட்ட ரத்த தானங்களையும் ஒருங்கிணைத்துள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஒரு புறம் பணியில் இருந்தபோது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த ஓட்டுநரின் கடமை உணர்வு; மறுபுறம் அவரது மறை வுக்குப் பின்னரும் பிறருக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்ற குடும்பத்தின் மனிதநேய முடிவு. இவ்விரண்டையும் இணைத்த நிகழ்வாக வெங்கடசாமியின் கண் தானம் அமைந்துள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad