பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் மீட்பு கோரி மாபெரும் தர்ணா !
பேர்ணாம்பட்டு, செப்டம்பர் 12 -
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகர பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறு த்தி, பேருந்து நிலையம் மீட்புக் குழு சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிய பேருந்து நிலையம் இது வரை செயல்பாட்டுக்கு வராத நிலையில், அதை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், பேருந்து நிலைய வளாகத்தில் முறைகேடாக கட்டப்பட்டு வரும் கடை களை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், நகர மன்ற தீர்மானம் இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு வருவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட கால் நடை நிலையம் இருந்த இடத்தில் கடை கள் அமைக்கக் கூடாது என்றும் கோரிக் கை விடுக்கப்பட்டது.போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா தலைமை தாங்கினார். பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக