கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க. கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தா. உதயசூரியன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி. மலையரசன் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர், முதலமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும், ஜனநாயக மாண்புகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக