பேரணாம்பட்டு பகுதியில் சகோதரத்து வம் சங்கமம் ரோடு மஸ்ஜித்தில் பள்ளி வாசல் பார்வையிடும் நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

பேரணாம்பட்டு பகுதியில் சகோதரத்து வம் சங்கமம் ரோடு மஸ்ஜித்தில் பள்ளி வாசல் பார்வையிடும் நிகழ்ச்சி !

பேரணாம்பட்டு பகுதியில் சகோதரத்து வம் சங்கமம் ரோடு மஸ்ஜித்தில் பள்ளி வாசல் பார்வையிடும் நிகழ்ச்சி !
பேரணாம்பட்டு , செப்டம்பர் 29 -
பேரணாம்பட்டு பகுதியில் சகோதரத்து வம் சங்கமம் ரோடு மஸ்ஜித்தில் பள்ளி வாசல் பார்வையிடும் நிகழ்ச்சி நடை பெற்றது, வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பகுதியில் உள்ள ரோடு மஸ்ஜித்தில் அதன் கமிட்டியின் தலைமையில் பள்ளி வாசல் பார்வையிடும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது இதில் பல்வேறு மதங் களை சேர்ந்த  மக்களிடையே அன்பு புரிதல் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் போக்கிலும் ஆன் பெண் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மசூதியை நேரில் பார்வையிட்டு மசூதி யின் அமைதியின சூழல் தொழுகை முறை மற்றும் இஸ்லாம் வலியுறுத்தும் அன்பு, அமைதி,மனித நேயம் சகோதரத்து வம் போன்ற பண்புகள் குறித்து அங்கு ள்ள இஸ்லாமியர்கள் எடுத்து கூறியுள் ளனர் மேலும் அங்கு வந்த பல்வேறு மதத்தினர் கூறுகையில் மசூதியை நேரில் பார்ப்பதற்கு முன்பு எங்களுக்கு சில வேறுபட்ட எண்ணங்களும் புரிதல் களும் இருந்ததாகவும் இங்கு நேரில் வந்து பார்த்த பழுகி உறையாடிய பிறகு நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும் மிகுந்த மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து ரோடு மசூஜித் கமிட்டி சார்பில் கூறுகையில் இந்த நிகழ் ச்சியின் முக்கிய நோக்கம் ஒரு வழிபாட்டு தலத்தை அறிமாகும் படுத்து வது மட்டும் மல்ல ஒருவரை ஒருவர் அறிந்து கொள் வது தவறானபுரிதல்களை குறைப்பது பரஸ்பர மரியாதையை வளர் ப்பதும் சமூக நல்லிணக்கத்தை வலப் படுத்து வதும்  இந்த உயரிய நோக்கத்தை திருக்குர்ஆன் மிக அழகாக எடுத்துரைத் திறிக்கிறது அதில் மணிதர்களே நாம் உங்களை ஓர் ஆன் மற்றும் ஒரு பெண் ணிலிருந்து படைத்தோம் நீங்கள் ஒரு வரை ஒருவர் அறிந்துக் கொள்வதாக உங்களைப் பல சமூகங்களாகவும் கோத் திரங்களாகவும் ஆக்கினோம் மேலும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்க் காக இந்த இறைச்செய்தி இந்நிகழ்ச்சி யின் அடிப்படை நோக்கமாகும் மகாகவி பாரதியார்   கூறியது போல் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலை யும் எங்கள் கூட்டம் என்ற மனித நேய உணர்வைப் போல வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதர்களாகஒன்றினைந்து வாழ்வதே ஒரு நல்ல சமூகத்தின் அடை யாளமாகும் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக பேரணாம்பட்டு என்றும் பல்வேறு மதங்களை சமூகங்களையும் சேர்ந்த மக்கள் சகோதர சகோதரிகளாக நெருக்கமாகவும் அன்புடனும் வாழ்ந்து வருவது பேரணாம்பட்டின் தனிச்சிறப் பாகும் என்று கூறினர் மேலும் இந்நிகழ்ச் சியில்  முன்னதாக டீ பிஸ்கெட் பிரட் கொடுத்தும் அதன் பின்னர் மதியம் உணவுகள் வழங்கினர் மேலும் இது குறித்து பேரணாம்பட்டு பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் பல்வேறு மதத்தினர் வெகு சிறப்பாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad