நீர் நிலை புறம்போக்கை ஆக்கிரமிப்பு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் கண்டித்த கவுன்சிலர் ஊர் பொது மக்கள்
பேரணாம்பட்டு. செப்டம்பர். 29 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எருக்கம்பட்டு ஊராட்சியில் நீர் நிலை புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்து வழி ஏற்படுத்தி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்த கவுன் சிலர்கள் ஊர் பொதுமக்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்கம்பட்டு ஊராட்சியில் ஒரு ஏக்கரில் நீர் நிலை புறம்போக்கு ஏரிக் கரை அமைந்துள்ளது அதன் பின்புறம் தனியாருக்கு சொந்தமான ஆறு ஏக்கரில் நிலம் உள்ளது அதற்க்கு வழி இல்லாத தால் ஏரிக்கரை நீர் நிலை புறம்போக்கில் இருந்து வழி ஏற்படுத்தி டிரேக்டர்களில் மன் கொட்டி அதனை நிரப்பும் பணியில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரானிவெங்கடேசன் செய்து. வந்துள்ளார்
இதனை அறிந்த எருக்கம்பட்டு கிராமத் தில் உள்ள கிராம மக்கள் கவுன்சிலர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை யில் ஈடுபட்டு வந்துள்ளனர்இந்நிலையில் இதனை அறிந்த பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சதிஷ் குமார் எருக் கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் தன சேகரன் பேரணாம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமார் மற்றும் சிப்பந்தி பாஸ்கர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் அதற்க்கு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரானிவெங்கடேசன் மற்றும் நில உரிமையாளர்கள் ஆடு மாடுகள் செல்ல வழிப்பாதைக்காக ஊராட்சியில் தீர் மானம் போட்டு அது குறித்து ஊராக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா கடிதம் கொடுத்ததாகவும் அதன் பேரில் வழி ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறி உள்ளனர் மேலும் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சதிஷ் குமார் தற் சமயம் ஊராக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா விடுமுறையில் உள்ளார் மேலும் இது குறித்து வருவாய் துறையினரிடம் உள்ள ஏ ரிஜிஸ்டர் மற்றும் கோப்புகளை ஆய்வுகள் செய்து இடத்தினை தாசில் தார் வைத்து சர்வே செய்து அளவீடுகள் செய்து பின்னரே பணிகள் தொடங்க வேண்டும் என்று கூறினார் மேலும் இது குறித்து எருக்கம்பட்டு கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து பணிகளுக்கும் ஊரா ட்சி மன்ற தலைவர் வேங்கடேசனே தலை இடுகிறார் அவர் எந்த ஒரு பணிகளிலும் தலையிடக்கூடாது ஊராட்சி மன்ற தலை வர் ராணி தான் வரவேண்டும் என்று கூறினார் மேலும் ஏரி நீர் நிலை புறம் போக்கில் வேளான்மை துறை சார்பில் செடிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக