திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் துரைராஜ் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையானது.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்கள், மற்றும் கல்விப் பொருட்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
மேலும், குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த துணிமணிகள், பீரோ, வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுக்காக வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் என வீட்டில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் தற்போது உடுத்த உடை, சாப்பிட உணவு, குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான பொருட்கள் என அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு அதிகாரிகள் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நோட்டு, புத்தகங்கள் மற்றும் கல்விப் பொருட்களை வழங்குவதுடன், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக