நடுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

நடுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி.


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நடுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 26.09.2026 முதல் நடைபெற்று வருகிறது.

இன்று 29.09.2026 செவ்வாய்க்கிழமை நான்காம் நாள் நிகழ்வாக, கோ. சுகுமார், தலைமை ஆசிரியர் தலைமையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி மனவளக்கலை யோகா அறக்கட்டளை தலைவர் டி.கே. சண்முகம் தலைமையிலான குழுவின் சார்பில் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சி. வேல், முதுகலை இயற்பியல் ஆசிரியர் த. மயில்வாணன், ஜெ. சரவணன் SMC ஆசிரியர், மு. ஜெயசீலன் (அலுவலகப் பணியாளர்) மற்றும் 25-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரா. நரேஷ் குமார்
கிருஷ்ணகிரி மாவட்ட
செய்தியாளர்
6380 88 6209

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad