சி.ம.புதூர் கிளை நூலகத்தில் பசுமை நுகர்வோர் தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

சி.ம.புதூர் கிளை நூலகத்தில் பசுமை நுகர்வோர் தினம்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் பசுமை நுகர்வோர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். நல்நூலகர் ஜா. தமீம் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ. பொன்னுசாமி, நூலக புரவலர்கள் அ. குலாப் ஜான், கு. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பசுமை நுகர்வோர் தினம் விழிப்புணர்வு உரையை திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி ஆய்வாளர் ஷா. ஷாநவாஸ் உரையாற்றினார் அவர் கூறியதாவது நாம் வாங்கும் பொருட்கள் சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததா என பார்த்து வாங்க வேண்டும். இயற்கைக்கு எதிரான மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் நெகிழிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனக் கூறினார் இந்த நாள் உலக அளவில் கொண்டாடப்படுகிறது என கூறினார் இதன் நோக்கம் பசுமை, தூய்மை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் நிகழ்வில் அவர் நூலக வாசகர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இறுதியாக ஊராட்சி செயலாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad