திருநெல்வேலி, செப்.28:
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், தமிழக அரசு, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார்.
ராகுல் காந்தி கூறும் பல்வேறு கருத்துகள் கேலியும், நையாண்டியும் நிறைந்ததாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் பேச்சுகளை வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுடன் ஒப்பிட்டு, அவர் எப்போதும் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.
ரூ.2,500 மகளிர் உதவித்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை விமர்சித்தார்.
கஞ்சா, போதைப்பொருள், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் நடவடிக்கை தேவை என்றார்.
பாஜக–திமுக கொள்கைகள் வெவ்வேறானவை என்றார்.
அரசு டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கூறினார்.
டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.
அக்டோபர் 4-ஆம் தேதி நெல்லையில் மின்வெட்டு தொடர்பாக பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
கோவில் நிர்வாகம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் பட்டியல் குறித்து கண்டனம் தெரிவித்தார்.
ஜெம் வீரமணி வழக்கில் கடந்த நான்கு மாதங்களில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக