காட்பாடியில் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

காட்பாடியில் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை !

காட்பாடியில் ஏரியில் மிதந்த அடை யாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை !
காட்பாடி , செப்டம்பர் 5 -
            வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கழிஞ்சூர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்  மிதப்பதாக அருப்பு மேடு பகுதி பொது மக்கள் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்ற போலீசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மிதந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்தவர் யார்? அவர் ஏரி நீரில் தவறி விழுந்து இறந்தா ரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad